யாருக்காகவோ சாகிறோம்-கங்கைமணி

தண்ணீரை மண்மீது
மழையாய் தெளித்தோம் !
தேன்கனி தீஞ்சுவை
திகட்டாது கொடுத்தோம் !
நிழற்ப்போர்வை எடுத்து
நிலம்தன்னில் விரித்தோம் !
காற்றில் பிராணனை
பிரித்தெடுத்துக்கொடுத்தோம்!
கூட்டில் பறவைகளை
குடும்பமாய் வளர்த்தோம் !
ஐந்தறிவு விலங்குகளின்
அடைக்கலம் நாங்கள் !
ஆறு குள பெருக்கத்தின்
ஆதாரம் நாங்கள் !
இயற்கையின் இருப்பிடம் -அதில்
நாங்களே ! முதலிடம் !
இருந்தும் ....!
எங்கள் இனம் அழிகிறது
எங்கள் மனம் உடைகிறது ,
ஊருக்காக உழைத்தோம் .
பாருக்காக தலைத்தோம் ,
யாருக்காகவோ சாகிறோம் !!!......
மரங்கள் .....
மரம் வளர்ப்போம் .....

எழுதியவர் : கங்கைமணி (19-Jul-16, 9:30 am)
பார்வை : 171

மேலே