ஆடை அணிகலன் ஆடம்பரம் - சில அஸ்திவாரங்கள்

மரியாதைக்கு உரிய பெண்களே..!!

உங்களின் ஜன்னல்களை நீங்களே திறந்து வைத்து விட்டு
ஆண்களின் கண்களை மட்டும் கதவடைக்கச் சொல்வதில் என்ன நியாயம்..??
அதற்காக ஆண்கள் அத்தனை பேரையும் நான் ராமனாக்கவில்லை. இருந்தும் கடந்த சில வருடங்களாக அதிகமாய் சமூகத்தை கெடுத்திருப்பவை
பாலியல் குற்றங்கள்தான்..!!

இவை எப்படி நிகழ்கின்றன..??

பத்து வயது சிறுமியை பலாத்காரம் செய்கிற வன்மம் எப்படி முளைத்தது..??
உண்மையில் ஊரெங்கும் உலவும் உங்கள் தேகம் பிதுக்கும் உடைகள் காட்டும் உடல்களின் இடைவெளிகள் கண்டுக் கண்டு பழுதடைகிற நெஞ்சம்...

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனிமையின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு
ராட்சஷ விஷ்வரூபம் எடுத்து மொத்தமாய் வரம்பு கடந்து தன் வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறது..!!

அத்தனைக்கும் காரணம் நீங்கள்தானென சொல்லவில்லை. முக்கியக் காரணமாய் நீங்கள்..!!

அநாகரீகமற்ற..
அடுத்தவர் கண்கள் கூசாத..
ஆண்கள் அவதிப்படாத ஆடைகளை..
முகத்தைத் தாண்டி மற்றதைப் பார்க்கத் தூண்டாத நாகரீக உடைகளை..
நீங்கள் அணிவதால் எந்த விதத்திலும் குறைந்து விடப் போவதில்லை..!!

அதனால் உங்கள் உடைகளை உன்னதமாய் உடுத்தி இனி வரும் சமூகத்தை பாலியல் வக்கிரங்களில் இருந்து கொஞ்சம் காப்பாற்ற உதவுங்கள்..!!

ஏன் எனில்...
என்றும் புனிதமானவர்கள் நீங்கள் !

எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் நீங்கள் !
எங்களின் தலைமுறைகளைப் படைக்கப் போகிறவர்கள் நீங்கள் !
எங்களின் நேற்றும் இன்றும் நாளையும் நீங்கள் !
எங்கே தவறு தொடங்கியதோ அங்கே திருத்திக் கொண்டிருந்தால்
ஆண்களும் நல்லவராக இருந்திருப்பார்கள்.
முடிந்த அளவு மூடி மறையுங்கள் !

உங்கள் அழகு பல பேர் ரசிப்பதர்க்கில்லை. ஒருவனுக்காய் பாதுகாத்து கொள்ளுங்கள் ! உண்மையான அழகினை அதில் காணுங்கள்..!!

இது ஒரு ஆண் பெண்கள் மீது போடுகின்ற பழியும் அல்ல.. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாடுகின்ற இகழ்ச்சியும் அல்ல..

விலையுர்ந்த பைக் இருந்தால் போதும். காதல் தன்னாலே வந்து விடும் அதுவும் தன் காதலனை அனைத்துக் கொண்டு பொது இடத்தில் வேகமாக செல்லும் காதல என்னும் போதையால் பாவம் ஆடை விலகுவது கூட தெரியவில்லை ...

ஒரு நண்பன் தோழிகளுக்குக் கூறும் அன்பான அறிவுரை !
ஒரு படைப்பாளி தன் பெண் சமூகத்தை விழிப்படைய வைக்கச் செய்யும் சின்ன முயற்சி !

பலிக்கும் என்ற நம்பிக்கையோடு்..!!

எழுதியவர் : மீள் (19-Jul-16, 2:01 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 170

மேலே