மறக்கமுடியவில்லை

உன்னை மறக்கமுடியவில்லை
மாறாக மன்னிக்க கூடவில்லை
என் கண்களில் காதல் கண்ட நீ
கண்ணீரின் காரணம் தெரியவில்லை என்றாய்

காதல் கொண்டாய் கசிந்து உருகினாய்
மயக்கம் கொண்டாய் மலர்ந்து நின்றாய்
பேசிப்பேசி தீர்த்தாய் பேசும்படி சொன்னாய்
சில்மிசத்தால் சிரிக்க செய்தாய்
குலம் பற்றி கேட்டாய் குடும்பம் பற்றி கூறினாய்
கூட வருவேன் என்று சத்தியம் செய்தாய்
பிரிக்க முடியாது என்று சபதம் கூட செய்தாய்

ஆயினும் மறந்தாயடா மறந்தே சென்றாயடா
விலகும்போது விளக்கங்கூட தேவையில்லை என்றாயடா
வலி தந்த நீ வாழ்வில் இல்லையென்றாயடா
கண்ணுக்கு கண்ணாக வரவேண்டிய நீ
கனவில் கூட வரவில்லையடா
மயக்கங்கள் தந்த நீ தயங்கி நின்றாயடா
விரும்பித்தான் சென்றாயோ
இல்லை மறந்துதான் போனாயோ..


அதனால், உன்னை மறக்க முடியவில்லை
மாறாக மன்னிக்க கூடவில்லை

எழுதியவர் : thilagavathimuthukrishnan (19-Jul-16, 4:17 pm)
சேர்த்தது : thilagavathi
பார்வை : 161

மேலே