காதல்
தமிழ் தாயின் மகனே !
செல்லம்மாவின் காதலனே !
கண்ணனை காதலித்தவனே!
புது கவியின் தாயே !
காதல் இங்கு உருமாறுகிறது
கயவரை காணும் கவி ஒன்று தந்திடு
மண்ணில் மாயும் மக்களை காக்க
மறுபிறவி ஒன்று எடுத்திடு
உன்வரிகளால் விடுதலை பெற்ற
என் இனமெல்லாம் வீழ்ச்சியுறுவதை தடுத்திடு .
வரைமுறை தவறும் மனிதரை
வழிநடத்திட வரிகள் ஒன்றை தந்திடு ......