காதல் என்பது

ஜாதி மதம்
ஏழை பணக்காரன்
பார்க்காத சமத்துவபுரம்
காதல்
இங்கே அழகிற்கு மட்டும்
விதிவிலக்கு

பற்றி எரியும் குடிசையில்
ஆனந்தமாய்
சுற்றி திரியும் குருவி
காதல்

அடித்துச்செல்லும் தோணியில்
பரவசமாய்
படுதுச்செல்லும் பூனை
காதல்

போர்க்களத்தில் போரிடாது
புன்னகைத்து நிற்கும்
தேர்க்களம் காதல்

போர்வளின் கூர்மை காதல்
அதிசயம் என்னவென்றால்
இதயத்தை ரத்தமின்றி ரணமாக்கும்

காதல் என்பது
இரு மனங்கள்
யாருக்கும் தெரியாமல்
செய்துகொள்ளும் நிச்சயதார்த்தம்
இதில்
காதல் வென்றால்
மாதுவோடு மணம்
தோற்றால்
மதுவோடு தினம்

ஒரு கரையில் மணவறை
மறுகரையில் பிணவறை
கொண்ட நதி காதல்
இதில்
எதிர் நீச்சல் போடுபவன்
மட்டும்
மணவறை சேர்கிறான்

எழுதியவர் : குமார் (20-Jul-16, 11:06 pm)
பார்வை : 668

மேலே