சாதி தீ

விதை ஒன்றை மண்ணில் விதைத்தேன்
வான்மேகம் ஒன்று மழை
தூவிட கண்டேன்....

செடியாக வளர்ந்து நிற்க
வண்ணங்கள் கொண்ட
வாசமலர் மலர்ந்திட கண்டேன்....

கனியாக மலர் கனிந்து இனிக்க
அதை தனக்கென்று பலர்
சொந்தம் கொண்டாடிட கண்டேன்.....

பகிர்ந்துண்ணும் குணம் வேண்டுமென்று
விளக்க நான் உயர்சாதியென்று ஒரு
மூடன் பிதற்றிட கண்டேன்....

நானென்ற எண்ணம் கொண்டு
நான் விதைத்த வேரை சாதி
தீயாய் எரித்திட கண்டேன்.......

இது ஏன் என்று மனம் நோக
தீக்குள்ளே எரிகின்ற
அக்கினி ஜுவாலையை கண்டேன்....

அக்கினி குழம்போன்று
திசை மாறி எதிர்நோக்கும்
நாளையும் கண்டேன்...........
அதில் சருகாகி உருமாறும்
சாதியும் கண்டேன்.......

எழுதியவர் : இந்திராணி (22-Jul-16, 1:57 pm)
Tanglish : saathi thee
பார்வை : 170

மேலே