குடி குடியை கெடுக்கும்

குடி குடியை கெடுக்கும்!!
_______________________

நிமிர்ந்த உன் பார்வை
நளிந்தே வீழ்வதற்கும்
துணை நின்ற உன் போர்வை
துயிலுரிந்து களைந்துவிடும்!!

உயர்ந்த உன் வாழ்வை
உடைத்தே உதரிவிடும்
இணைந்த பல உறவை
இடித்தே வீழ்த்திவிடும்!

அழகிய நன் நெறியை
அழித்தே தகர்த்துவிடும்
ஓழுகிய நல் வழக்கங்களை
ஓர மாக்கியே ரசித்துவிடும்!!

கொண்ட சீர் கொள்கை
குடை சாய்த்தே கவிழ்த்துவிடும்
நீ கொண்ட இம்மதுவே
உனைக் கொன்று சாய்த்துவிடும்!

அழகிய உன் குடியை
இக்குடியே அழித்துவிடும்
உன் கையால் உனை மாய்க்க
சதி பல செய்துவிடும்!!!!!

எழுதியவர் : ஜவ்ஹர் (23-Jul-16, 3:33 pm)
பார்வை : 518

மேலே