தொடுவானம்
தொடுவானமே...
தூரத்தில் நீ -உன்னைத்
தொட நினைப்பவன் நான்..!
உன்னை அணைக்க நடக்கிறேன்....
நீ விலகிச் செல்கிறாய்
இரசிக்க நினைக்கிறேன்
இரவில் மறைகிறாய்..!
கதிரவன் கைப்பட்டு
கனியாய் இனிக்கிறாய்- இந்த
காதலனைக் கண்டால்
கானல் நீராகிறாய்.…!
அன்று
உன்னைத் தொட நினைத்தார்
உலகம் படைத்தார்...
இன்று
உனையே படைக்கிறேன் நான்
என் உள்ளக் கவிதையாக!