அவள் காதலின் ஆசையோடு அசைந்தாடுவேன்

அவள்
காதலின் ஆசையோடு அசைந்தாடுவேன் ...

பெண்ணே
என் மூக்கு கண்ணாடியை
எங்கு மறைத்து வைத்தாய்?
சற்று மஞ்சலாக
தெரியவேண்டிய பார்வை
நீயாகவே தெரிகிறதே ...

அவளோ
அப்படியென்றால்
கட்டிக்கொள்ளுங்களேன்
என்றாள் ...


நானும் கட்டிகொண்டேன்
என் நெஞ்சம் முகர்ந்தாள்
ஆசையாக ...
சற்று மெதுவாக கேட்டது
இதயத்திற்கு
எழுபது வயதாகியும் இது
என்னவென்பது போல் ...

என் இதயத்திற்கு காதல்
மட்டும் தானே தெரியும் ...
தட்டுபட்டது மூக்கு கண்ணாடி
என் சட்டைப்பையில்
முன் பல் இல்லா
அந்த குமரி இதழ் பதிக்கையில் ...
என் மறதிக்கு நன்றி
சொன்னேன்!

எங்களுக்கு
வயதானால் என்ன ?
என்றும்
அவள் காதலின்
ஆசையோடு அசைந்தாடுவேன்
அவள் மூச்சுக்காற்றில்
அன்பு கணவனாக....

எழுதியவர் : மருதுபாண்டியன். க (28-Jul-16, 7:51 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 102

மேலே