நேசத்தின் கதகதப்பு

கலைந்திருந்த மேகம் கூடினவே,
கண்டதும் அதன் துணையினை,
கலக்கத்தில் இருந்த நானும்,
களிப்பானேன் கண்டதால் என் தலைவனை,

மெத்தையில் அல்ல மேகத்தில் தலை சாய்த்தேன்,
மன்னவனின் மடியில் சாய்ந்தபொழுது,
மெல்லிய பறந்திடும் மலரினை தொட்டேன்,
மயக்கும் அவரின் கரமதை பிடித்தபொழுது,

வானில் காணும் வண்ணம் யாவும் - அவர்
வெண்மை மிகுந்த மனமென தெரிய,
வீசும் பூங்காற்றின் தீண்டல் - அவரின்
விறல் தீண்டலென உணர்ந்தேன் !

இனிமைமிகு பல இசைதனை கேட்டேன்,
இனியவரின் குரலினை கேட்டபொழுது,
இனித்திடும் சொற்களால்,
இதமாய் மிதந்தேன் வானிலே,

கரம்பிடித்து கூட்டி செல்லுங்கள்,
குழந்தையென மகிழ்ந்து உடன் வந்திடுவேன்,
குச்சி மிட்டாய் வாங்கி தந்திடுவீரோ,
குறைகள் ஏதுமின்றி மகிழ்ந்திடுவேன் !!!

எழுதியவர் : ச.அருள் (28-Jul-16, 9:22 pm)
Tanglish : nindraadum ninaivu
பார்வை : 332

மேலே