பூ, ப்பூ
பறக்கும் பூ
செடியில்
வண்ணத்துப் பூச்சி!
தொல்லை விரும்பாத
பூ சிறகுகளை
விரிக்கும்,
செடி கூட
பாதுகாப்பில்லையென்று..!
சில நேரம்
செடிகளுக்கு உறவாகிட
செல்லுபடியாகும்
செடிகள் அறியாமல்
வண்டுகளின் வாண்டுத்தனம்
பிடிக்காத பூவுக்கு
வேறு வழியில்லை,
மௌன யுத்தம் -
அதனாலோ என்னவோ
முள்ளுடன்
பிறந்திருக்கும்
பூ,
ப்பூ என நினைக்கும் பட்சத்தில்..!