விண்ணை நோக்கி

பூமியெங்குமே
புழுதி புயல்!
இயற்கை காற்றை
இனிமையாய் சுவாசிக்க
விண்ணை நோக்கி
காலடி எனது!
பூமியெங்கும்
சூதும்….வாதும்
சூதறியா நிலவின்
குளிர்வினில்
வாதமறியா
நட்சத்திர சிரிப்பலையில்
திளைத்திட விண்ணை நோக்கி
காலடி எனது!

பூமியெங்கும்
ஏகமாய் கல்விக்கட்டணமாம்
ஏங்கும் பெற்றோர்
இயற்கையின் பாடங்களை
இலவசமாய் கற்றுக்கொள்ள
விண்ணை நோக்கி
காலடி எனது!
விண்ணின் நிலவும்…
நகைத்திடும் நட்சத்திரங்களும்
வா….வா. என்றே அழைக்க
விண்ணை நோக்கி
எனது காலடி!
--- கே.. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (5-Aug-16, 10:02 pm)
சேர்த்தது : கேஅசோகன்
Tanglish : vinnai nokki
பார்வை : 166
மேலே