சுதந்திரம்
சுதந்திரம்...!
அன்னியன் அளித்ததை
இந்தியன் கிள்ளி எறிகிறான்
சுதந்திரம் -எது
அரைகுறை ஆடையில்
அலைவதா ...
ஆறடிநீல கூந்தலை
அரையடி ஆக்குவதா ...
பாரதி கண்ட புதுமை பெண்ணல்ல
இவள்...!
சுதந்திரம் -எது
பாலியல் பலாத்காரம்
செய்வதா....
பலபேர் முன்னிலையில்
படுகொலை செய்வதா...
விவேகானந்தர் கண்ட இளைங்கனும் அல்ல
இவன்..!
அன்னியன் மனிதனை
அடிமை படுத்தினான்......
இந்தியன் மனிதத்தை
அடிமை படுத்துவிட்டான்....
இன்னும் இருட்டில்தான் இருக்கிறது
இந்தியா....