எல்லைக் கோடு”

மயான அமைதி மனதை கலக்கும் ;
வெய்யிலின் தாக்கம் உடலை நனைக்கும் ;
வீசும் காற்றும் வேதனை அளிக்கும் ;
இரவும் பகலும் இதயத்தை கணக்கும் !

உரிமையை நிலைநாட்ட ;
உணர்ச்சிக்கு மதிப்பளித்து ;
ஊடுருவல் இல்ல்லாதிருக்க ;
உருவாக்கப்பட்டதே எல்லைக் கோடு !

எல்லைக் கோடு தொடாதவரை ;
எமனுக்கு வழி இல்லை ;
எவர் உயிரையும் எடுக்க !

பிரித்து குடுத்தது பிரிவினைக்கு அல்ல !
எல்லை வகுத்ததும் எதிரிக்காக அல்ல !

தூக்கம் தொலைத்து, துயரம் மறந்து ;
சன்தோஷத்தை சாக்குமூக்குட்டையில் கட்டிவைத்து ;
கணப்பொழுதும் கண்ணுறங்காமல் -
காவல் காத்து நிற்பதும் ;
எல்லைக் கோடு தாண்டிடாது காக்கவே !

எனது என்பதற்கும் -
எனக்கும் ஓர் எல்லைக் கோடுவேண்டும் !
ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ;
எல்லைக் கோடு தாண்டமாட்டேன் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (15-Aug-16, 2:05 pm)
பார்வை : 127

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே