இது போராட்ட நேரம்

மார்புறமேறிய வீர மறவரின்
---வாள் வீசிய கைகளெங்கே
மாந்தளிர் மேனிகொண்ட மகளிரின்
---வாகை சூடிய கைகளெங்கே
வாய்மை என்றும் பேசியலைந்த
---மாந்தர் இன்று எங்கே
நாம் அடிமைப்பட்டுப் போனதால்
---நம்மரபு மறந்து போகுமோ
நமையண்டிப் பிழைக்க வந்த
---வெண்ணிறப் பதர்கள் அவர்கள்
வஞ்சத்தால் நம்மை அன்று
---அடிமையாக்கிய வீணர்கள் அவர்கள்
இமயம்வரை ஆண்டவர் என்னாட்டவர்
---அவர்கட்கு வீரமற்றுப் போகுமோ
கொடை கொடுத்துச் சிவந்த
---கைகளுடையவர் எந் நாட்டவர்
அடிமையாக்கிப் பறித்து உண்ணும்
---செயல் உனது வீரமாகுமோ
நேற்றுப் பொழிந்த மழையில்
---சிறகு விரித்த ஈசல்களே
எங்கள் சிராரும் உன்சிரம்
---கொய்ய அஞ்சப் போவதில்லை
கடல்கடந்து உன்நாடு நீதிரும்பாமல்
---இங்கு உன்னுயிரும் மிஞ்சப்போவதில்லை.

- செ.கிரி பாரதி.

எழுதியவர் : செ.கிரி பாரதி (15-Aug-16, 7:46 pm)
பார்வை : 1124

மேலே