அழகே அழகிற்கு கவிதாஞ்சலி

நா. முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

பாட்டொன்று எழுதுவதற்கு அமர்ந்து விட்டால்
பசிதூக்கம் அத்தனையும் மறந்தே போய்
மெட்டினையே நினைவினிலே அசை போட்டு
மெல்லிசையை அதனிலே கரைவ தற்கே
இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு
இமைமூடாமல் இருந்த து எத்தனை நாளோ ?
பூட்டிவைத்த இதயங்கள் கொண்ட பேரும்
பொன்னான உன்பாட்டில் கரைந்த னரே !

வெள்ளித் திரையதற்கு பாடல் போதுமென
வான்திரைக்கு வந்த்துவோ ஆசை கொஞ்சம்
அள்ளித்தான் அணைத்த்துவே அன்பு கவியை
அரும்பாடல் தனைசெய்து தேசத்தின் விருதினை
அள்ளித்தான் கொண்டதோடு அன்பான நெஞ்சையே
கிள்ளித்தான் பார்த்துவிட்டாய் பாடல் தன்னை
வெள்ளித்திரைதான் மறந்திடுமோ, வேதனை தான்
விடிந்திடுமோ, இளங்கவிகளுக்கே ஏனிந்த சோகம்!

எழுதியவர் : கே. அசோகன் (17-Aug-16, 1:47 pm)
பார்வை : 62

மேலே