துக்கத்தின் தூறல்கள் நாமுத்துக்குமார்

கவிதைகளின் கனவு நாயகன்...
இன்று
மரணக்கவிதை எழுத சென்றிருக்கிறான்..

வெயில் அழகு ...உதிரும் இலை அழகு..மரணமும் அழகா?

41 வசந்தங்கள் அவரை விழுங்கிய போதும்
தமிழ் அவரை இன்னும் முகர்ந்து பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறது..

நெஞ்சுக்குள் ஏதோ ஒரு கவிதை மணி
ஒலித்துக்கொண்டிருந்தது....கடந்த சில நாளாய்
மௌனம்...மௌனம்.

மெல்லிய சோகம் சுமந்த மேகம்
என் வீடு தேடி மழை பொழிகிறது..

மரணம் ஒரு கொசுவுக்கும் நேரும்..கொற்றவனுக்கும் நேரும்..
ஒரு கவிதை விதைக்கு நேரலாமா?

ஆழ்ந்த உறக்கத்தில் கூட விழித்துக்கொண்டு
விசும்புகிறது ...இந்த கவிதை மனம்..இந்த முத்துக்கவிஞனுக்காக...

இரவெல்லாம் ஞாபக கொசுக்கள் ...

கருப்பு வெள்ளை பூக்களுண்டா?
என்று மொய்த்து போய்விட்டன...

காலையில் கண்ணில் நீர்த்துளிகள்
இதை தந்தது யார் ...

முத்துக்கவிஞனின் எழுத மறந்த கவித்துளிகள்..

கைகளால் கண்ணீரை துடைத்து விட்டேன்..

மனதில் உள்ள மரணக்கறையை துடைப்பது யாரோ??

கண்ணீர்துளியோடு....க.நிலவன்..

எழுதியவர் : க.நிலவன்.. (17-Aug-16, 12:35 pm)
பார்வை : 659

மேலே