தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் - 59 = 195
“ஆலமர பக்கத்திலே அன்றொருநாள் நின்றிருந்தேன்
அங்குவந்த என்னை நீ அதிசயமா பாத்து நின்ன..!”
“அந்நைக்கு போனவன்தான் இந்நைக்கு வந்திருக்க
இத்தனை நாளா காணமா எங்கய்யா போயிருந்த ?”
தேடிவந்தேன் நான் உன்னை சேதிய சொல்லிப்புட
மண தேதிய குறிச்சுவர தேவாரம் போயிருந்தேன் !
எத்தனையோ ஆளிருக்க என்னை ஏன் நீ பாத்த..?
எல்லாமே நல்லதுன்னு என்னை நான் கொடுத்தேன்
கரும்படலம் போலவுன்னை கருத்துடனே காத்திடுவேன்
கல்யாணம் பண்ணினாலும் காதல மறக்க மாட்டேன்
உன்னையே உலமாற உண்மையா காதலிச்சேன்
உன்னையே மணப்பதென்று தீர்மானம் போட்டுக்கிட்டேன்
ஒருநாளும் உன்னை நான் ஓதுங்கி செல்லமாட்டேன்
தினம் திருநாளூ கொண்டாட என்னையே அர்பணிப்பேன்
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
இருவருக்கும் இடையிலே
இனியில்லை இடைவேளை
நலமாக நாம்வாழ
நல்லவர்கள் உள்ளனரே
நமதன்பை பிரித்திட
நாரதருக்கும் உரிமையில்லை…