ravisrm இன் கவிஞர் நாமுத்துக்குமார் அவர்களுக்கு அஞ்சலி மடல்

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை

என்று எழுதிய கவிஞர் அடைப்பட்டது கண்ணாடி குவளைக் குள்ளே பிணமாக !


மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று

எழுதிய கவிஞர் தன் மகளுடன் சிரித்து பேசாமல் சிறகடித்து மறைந்து விட்டார்
காமத்தின் கதவுகளை உடைத்து பல அப்பாக்களுக்கு ஆசானாக !


மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு

என்று எழுதிய கவிஞர்

மழையை மட்டும் நேசிக்காமல் வெயிலையும் நேசித்த இந்த ஈர இதயம் ஈர மணல் படுக்கையில் வெயிலின் தாலாட்டில் உள்ளே உறங்குகின்றது !


அரிசிமாவில் கோலமிட்டுள்ளார்கள் என்று எண்ணிய எறும்பு உன்னதும் உணர்ந்தது சுண்ணாம்பு என்று


அயராது உழைத்து கண்விழித்து எழுதி பட்டம் பெற்றவன்
தன் உடலின் குற்றத்தை அறியாமல் போனான்
பணம் இல்லாத போதும் தான் ஒருவரிடம் கை நீட்ட வில்லை
அவன் பேனா மட்டும் பேசியது மரண எழுக்களாக !


எனக்கு மிக மிக பிடித்த எழுத்தாளர் மிக சிறந்த கவிஞர் மென்மையான மனம் படைத்த மேதை

தமிழ் சினமா அவரின் குடுமத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை செய்துதர வேண்டும் என்று அவருடைய ரசிகனாக அவரை நேசித்தவானாக கேட்டுக் கொள்கிறேன்

இதயம் உள்ளவர்கள் கண்ணீரில் உங்கள் இதயம் சாந்தியடட்டும்

Ravisrm

எழுதியவர் : ரவி . சு (19-Aug-16, 6:43 pm)
பார்வை : 407

மேலே