கவிஞரின் மரணம்

கவிஞருக்கு மரணம்
காலம் நடத்தும் சோதனை !!

மண்ணில் விழும் விதையாய்
விருட்சமாய் எழுவானே தவிர
விறகாய் சாம்பலாக மாட்டான் !!!

புத்தகங்களால் வளர்ந்தவன் அவன்
இனி புத்தகமே அவன் புகழை வளர்க்கும் !

விருதுகளை எதிர்நோக்கியவன் பெயரில்
நாளை விருதுகள் கொடுப்பதே பெருமை !

சொல்லைக் கவியாய் செதுக்கியவனின்
வாழ்வை வழியாய் பின்பற்றுவதே பெருமை

மண்ணுக்கு உரிமை அவன் உடல் என்றால்
மனிதனுக்கு உரிமை அவன் செதுக்கிய
செந்தமிழே ! செத்துமடிந்திடாத
செம்மை கவிகளே!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (20-Aug-16, 10:36 pm)
Tanglish : kavignarin maranam
பார்வை : 135

மேலே