கனத்த காதல்

முழு ஆண்டு ஏங்கிக் காத்துக்கிடந்து
பின் ஒட்டிக் கொண்ட தேகங்கள்,

ஒட்டிய உதடுகள் பிரிய வழியின்றி
கட்டிய கைகள் இறுக இடமின்றி
பின்னிய கால்கள் விலக மனமின்றி
கட்டுமூட்டையாய் கிடந்தநிலை,

காட்டுக் கருவேல முட்கம்பு
காலனியின் அடிவரை ஒட்டிநின்று பிரிக்கமுடியாமல் பாதநுனியில்
சிறுவலி சிதறிய நிலை போல்,

முனகியவள் முட்களின் வலியால்தான்
துடிப்பதாய் உணர்ந்து அவன் பதற,

பதறியவன் இறுக்கிய இறுக்கத்தால்
திணறினான் என அவள் கலங்க.

முடிவுபெறாத, முடிக்கமனமில்லாத
முடிக்கமுடியாத முடிவுதெரியாததாய்
முடிந்தது காதலின் இன்பக் கலவி.

இருந்தபடியே வீங்கிய வீக்கங்கள்,
நிறைந்தபடியே பொங்கிய மனம்.





எழுதியவர் : jujuma (27-Jun-11, 3:47 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 384

மேலே