அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
பிரசவத்தின் மூலம்
முகவரியாகி
அன்பினை அமுதாய்
படைத்து
பாசத்தை பரிவுடன்
பகிர்ந்தளித்து
பஞ்சமின்றி பரிமாறும்
பைந்தமிழாய்
மாறாத மனநிலை
மாதரசியாய்
பிரியமுடன் பிரிந்திடா
எண்ணமுடன்
மகிழ்வுடன் மாசற்ற
உள்ளமுடன்
நலமுடன் பேணிடும்
அம்மாவைப்
போற்றிடுவோம் ....
பழனி குமார்