நட்பெனப் படுவது

நட்பெனப் படுவது -
நலமே கொண்டிடடால்
நல்லதோர் பொழுதை -
கண்டிடலாம் அங்கே.

அதற்கு மேலும் போயிடடால்
ஒரு சாண் இல்லை இரு சாண்
உயரலாம் உன்னளவில் -
கொண்டிடட நட்பால்.

இதன் மேலும் வேண்டுமென்றால்......
மறந்து விடு - நட்புகள்
அனைத்துமே வருவது -
நலமுடன் இருந்திடின் மட்டுமே.

எல்லைகள் எவர்க்கும் இங்குண்டு
உனக்கு மடடல்ல -
எல்லை தாண்டி வருவார்
என்றே எதிர் பாராதீர் -
வந்தால் நலமே -
என்று மட்டும் கொண்டிடு.

எதிர்பார்ப்புகள் மட்டும் வேண்டா
நம்பிடு உள் மனதை -
கேட்டிடு எல்லாவற்றையும்
கலந்திடு உன் மனதை -
கலக்கமின்றி வாழ்வாய் என்றும்.

செல்வி விசாகுலன்

எழுதியவர் : செல்வி விசாகுலன் (25-Aug-16, 4:06 pm)
பார்வை : 578

மேலே