அதிகாலையிலே

அதிகாலைக்
கனவில்
உதயமான
என் இதயமே.....
நீ அங்கே
நலமா.....?

கனவிலும்
நிஜத்திலும்
காதலே
உன்னைத்தான்
கட்டித்தழுவுகிறேன்.....
விட்டுப்
பிரிந்தாலும்
பிரியாத
பிரியத்தால்.....துயரமாய்
என் வாழ்வு......!!

நித்தமும்
நித்திரை
எழுத்தில் தான்....
நிஜமாய்
கண்களில்
இல்லையடி.....
காயம் கொண்ட
உள்ளம்.....ஆகாய
வான் பார்த்து.....
அழுது
கொள்கிறது......!!

கடல் அலை
பார்க்காத
கடற்கரை
நாட்களும்......
மழையே இல்லாத
பொழுதில்.....
குடைக்குள்
ஒழிந்த வெட்கமும்......
கொஞ்சிப்
பேசி.....கொண்டாடிய
நாட்கள்
எங்கே தொலைந்தன....?

தேடித்
தேடி திசைகள்
தவறினேன்.....தெய்வத்தையும்
அன்றாடம்
நாடினேன்......
தேவியே என்னுள்
வாழும்
நாயகியே......
நலமோடு நீ.... வாழ்ந்திட
என்
நலமுள்ளவரை
நான் வாழ்த்துவேன்......!!

எழுதியவர் : thampu (26-Aug-16, 1:31 am)
பார்வை : 104

மேலே