எங்கேயோ கேட்ட குரல்
இருக்கிறதா இல்லையா
அவ்வப்போது எட்டிப்பார்க்கிறதா..
எல்லோருக்கும் கிடைக்கிறதா..
பணம்படைத்தவருக்கு மட்டும் பணிகிறதா..
நாம் இருப்பது சுதந்திர நாடா..
சம உரிமை இப்பொழுதாவது நிலவுகிறதா..
அடித்தட்டு மக்களுக்கு
முன்னேற்றம் உண்டா..
முன்னேறத் துடிப்பவருக்கு
கைகொடுப்போர் உண்டா..
புதைக்க புதைக்க காழ்ப்புணர்ச்சிகள்
விதையாய் மாறி முளைக்கிறதா..
விதைக்க விதைக்க உண்மைகள் எல்லாம்
களையாய் பிடுங்கப் படுகிறதா..
பல கேள்விகளுக்கு பதில் உண்டு
சில கேள்விகள் கேட்கப்படுதவற்கு முன்பே
தீயிலிட்டு பொசுக்கப்படும்..
எங்கேயோ கேட்ட குரலாகவே இருக்கிறது
இன்றும் நீதியின் குரல்....
அதன் கழுத்தைப் பிடித்தபடி
பல பண முதலைகள் இருப்பதால்...
உயிரைப் பிடித்தபடி இன்று
கண்ணீர் விட்டுக்கொண்டுள்ளது நீதி...