தினம் ஒரு காதல் தாலாட்டு - தனிமை - 78 = 205

“மஞ்சள் நிலவே மனமிறங்க வேண்டும்
மஞ்ச வாசியின் மனதறிய வேண்டும்
சங்கு கழுத்தை நீ காட்ட வேண்டும்
தங்கத் தாலி நான் கட்ட வேண்டும்”

பதினாறு வயதில் பருவம் மலரும்
பருவ மகளின் இளமை மிளிரும்
பன்னீர் புஷ்பம் சுமந்து திரியும்
கண்ணீர்கூட காதலாய் தெரியும்

புள்ளி மானாய் துள்ளும் காதல்
அல்லி மலரே அந்தியில் ஊடல்
வெள்ளி கொலுசொலி மெல்ல சினுங்க
அள்ளி அணைக்குமே இன்ப கரங்கள்

உறங்காத விழிகளுக்கு காதல் உரமிடு உயிரே
உதவாத காதலுக்கு உயிர் இருந்தென்ன உயிரே
கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்தான் காதல் - அதை
முன்னுக்கு கொண்டுவர என்னுயிரை தருவேன் உயிரே

முத்தமிடும் மஞ்சத்தில் மலர் ரொம்ப இருக்கு
மொத்தமாய் நான் மணக்க விட்டுவிடு எனக்கு
கச்சைக்கு விடை கொடு - கக்கத்தில் இடம் கொடு
அச்சத்தை நீ தவிர்த்து அத்தானை அணைத்திடு..!

எழுதியவர் : சாய்மாறன் (27-Aug-16, 6:07 pm)
பார்வை : 65

மேலே