இயற்கையைப் பேணுவோம் உயிரினங்களை அச்சுறுத்துவதைத் தவிர்ப்போம்
நரகாசுரன் என்ற கொடிய அரக்கன் வாழ்ந்ததைக் கண்டவர் யார்?
கொடியவன் மடிந்த நாளை மறப்பதுதானே அறிவுடமை.
புத்தாடை உடுத்தி பலகாரம் உண்டு மகிழ்வது தவறல்ல.
கேடு தரும் வெடிகளை வெடித்து, வீட்டு விலங்குகளையும் பறவைகளையும், முதியோரையும், பச்சிளங்குழந்தைகளையும அதிர்ச்சிக்கு ஆளாக்குவதை கடவுள் மன்னிப்பாரா? இதய நோயாளிகளை காலம் கடத்தாமல் எமலோகம் அனுப்பி வைக்க ஆசைப்படுது நியாயமா?
மதத் தலைவர் எவரும் தீபாவளி வெடிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லையே அதற்கென்ன காரணம்?
அரசியல் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள் எல்லாம் தீபாவளி வெடிகளுக்கு எதிராக கருத்து எதவும் சொல்லாமல் மவுனமாக இருப்பது ஏன்?
வெடியில்லா நிகழ்வு இல்லை: பிறந்த நாள் கொண்டாட்டம் முதல் இறுதி ஊர்வலம் வரை.எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வெடி. கந்தகப் புகையாலும், இடியோசை வெடியாலும், கண்ணைப் பறிக்கும் ஒளியாலும் யாருக்கு லாபம்.
பட்டாசு சனியனை தவிர்ப்போரை உயர்ந்த மனிதராக ஏற்றுக்கொள்கிறேன.