அம்மா என்பவள்

அம்மா என்பவள் தன்னுள் சுமந்தாள் என்னை அன்பாலே..
அவர் அருமை நிறைந்த கணவனை இழந்து
தவித்தார் மண்மேலே...
இனி மகனே சொத்தென்று மாதம் பத்து
வலியைப் பொறுத்தாளே....
ஐயோ பாவம் ஊரார் சொல்கேட்டு
என் தாயை நானும் வெறுத்தேனே...
நான் செய்த பாவத்தை மறந்தாளே...

மகனே மகனே என்று சொல்லி
தன் பசியை மறந்தாளே...
மகனின் தேவையை மனதில் வைத்தே
தன் கடமைகள் செய்தாளே..
காலம் கடந்த பின்னும் கூட
அன்பை வளர்த்தாளே...
இளைய மகனின் துன்பம் கண்டு
இன்றும் எண்ணி துடித்தாளே
பல சுமைகளை சுமந்தாளே.....

ஆயிரம் பிறவிகள் நான் எடுத்தாலும்
அவள் அன்பிற்கு ஈடாகுமா?
அவள் கனிவாய் தந்த இனிய பாச மொழிகளை
என் மனம்தான் மறந்திடுமா?
அவளை இன்று என்னுடன் சேர்த்தால்
கெளரவம் குறைந்திடுமா?
அவளின்றி நானேதம்மா..?
அவள் வந்து கொடுத்த என்னுடலும் உயிரும்
நான் இறந்தாலும் கடன் தீருமா?

எழுதியவர் : கிச்சாபாரதி (28-Aug-16, 1:13 pm)
Tanglish : amma enpaval
பார்வை : 84

மேலே