உன் காதலனாக
நானும் நீயும் சேரும் நேரம் காதல் மோகம் உன்னை தேடும் காம தாகம் என்ற நேரம் நீயின்றி தவிக்கும் சோகம் அதை அறியாத உன் கோலம் நான் கற்ற பாடம்.
பெண்ணான உன்னை, என்னை உன் கருவில் சுமந்த தாயாக முதலில் கண்டேன், என் தாயின் வளர்ப்பு நான் பெற்ற சிறப்பு பின்பு பெண்ணான உன்னை என் மனைவியாகவும் கண்டேன்.
மாறும் காலம் உன்னை தேடும் நேரம் நீ என் அருகில்லில்லா சோகம் நான் கொண்ட மயக்கம் என்னை மடக்கியதன் நோக்கம் அறியாத காலம் என் வாழ்வில் நான் செல்லும் பயணம்.
வாரம்தோரம் உன் வருகைக்காக நான் காத்திருந்த காலம் சொல்லும் என் காதல் மோகம் உன்னை தேடும் நேரம் நீ சென்ற பயணம் எங்கே ? என்ற கேள்வி இங்கே, கேட்பதோ அங்கே !
பெண்ணான உன்னை எந்தன் மனைவியாக நான் கண்ட கனவு ஒருநாள் நிஜமாக மாறும் என்ற நம்பிக்கை என்னிடம் அதிகம் என்பதே எந்தன் பலமாக என்னை அரவணைத்தது !