என்று திருந்தும் இந்த சுதந்திர பாரதம்

நெஞ்சு பொறுக்கவில்லையே
இதை கண்ணட தருணம்
என் நெஞ்சு பொறுக்கவில்லையே..

தாயாய் வந்த தாரத்தை
துளைத்துவிட்டு
அட்டகம் செய்ய கூட
உதவி கிட்டாமல் பூதவுடலை
தன் தோளில் தொங்கவிட்டு
ஏளனமாய் மனிதர்
கூட்டம் வேடிக்கை பார்க்க
மகளின் கண்ணீர் கண்டு
மயானம் சென்று சடலத்துடன்
செய்வதறியாது விழித்து
கண்ணீர் வடித்து
வெம்பி வெதுங்கி
தனிமையில் பட்ட மரமாக
நின்ற அவனின் மன
வேதனை யார் அறிவார்??

ஏழ்மையாக பிறந்தது
அவன் தவறா..??-இல்லை
பாழாய் போன
பாரதத்தில் பிறந்தததுதான்
அவன் தவறா ..??

கண் எதிரே
வெட்டுப்பட்டாலும் ,
பிச்சைக் கேட்டாலும்,
சுட்டுப் போட்டாலும் ,
செத்துப் போனாலும் ,
கழுகு பிணம் தின்றாலும்,
வேடிக்கைப் பார்ப்பது
என்பது நம்
கலாச்சாரம் ஆகிப்போனது ...!!

எளியவனின் கண்ணீரில்
அரசியல் காணும்
அரசியல் வியாதிகள் உள்ளவரை ....
பிணத்தை எடுக்க கூட
பணத்தை பறிக்கும் அதிகாரிகள் உள்ளவரை ...
ஒருவனின் வலியில்
காசு தேடும் ஊடகங்கள் உள்ளவரை...
மனிதனை மனிதன்
நேசிக்காதவரை ....

பாரதம் என்பது நாடாகாது
அது ஒரு மயான பூமியே..
அதில் வாழும் நாமெல்லாம்
வெறும் பிணமே .....!!

என்று திருந்தும்
இந்த சுதந்திர பாரதம் ....???

ஏக்கங்களுடனும்
கண்ணீருடனும்
மடிந்து போகிறது
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பிணமும்

என்றும்....என்றென்றும் ...
ஜீவன் (பிணம் )

எழுதியவர் : ஜீவன் (29-Aug-16, 4:35 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 58

மேலே