இந்த நிலை தான் மாறிடுமோ
இந்த நிலை தான் மாறிடுமோ...??
பாலின்றி தவித்திடும்
பிஞ்சு மழலையின்
பசி தாகம் தான்
தீர்ந்திடுமோ....?
அரை வயிறு
நிரப்பிடவும்
உணவற்று
தவித்திடும்
ஏழையின்
ஏழ்மை நிலை தான்
மாறிடுமோ....?
ஒரு வேளை
உணவை உண்டிடவும்
வழியற்று தவித்திடும்
மானிடனின்
கஷ்ட நிலைகள் தான்
மறைந்திடுமோ.....?
படிப்பில் ஆர்வமிருந்தும்
சிறந்த மதிப்பெண்கள்
பெற்றிருந்தும்
கனவுகளை தொலைத்து
கல்லுடைத்திடும்
மாணவனின்
மனக் கவலைகள் தான்
விலகிடுமோ....?
பல கலைகள்
பயின்றிருந்தும்
பட்டப்படிப்பு
முடித்திருந்தும்
சிபாரிசும் பணமும்
அற்றதால்
வேலையற்று திரிந்திடும்
இளைஞர்களின்
கனவுகள் தான்
நிறைவேறிடுமோ....?
மனமிருந்தும்
பணமில்லாது
விடியலை நோக்கி
காத்திருக்கும்
ஏழையின்
வறுமை நிலை தான்
விலகிடுமோ....?
பணமுள்ளவன்
விண்வெளியில்
பறந்திடவே
பணமற்ற ஏழையவன்
வீதி ஓரங்களில்
செத்து பிழைத்திடும்
நரக வாழ்க்கை தான்
மாறிடுமோ.....???