நண்பா உனக்கு
நண்பர்களுக்கு.......
-------------------------
நண்பர்களே....
என்னை கூர்மைப்படுத்துங்கள்,
கூர்வாளால் அறுக்காதீர்கள்....
என் முன்னால்
தீபம் ஏந்தி செல்லுங்கள்,
என் பின்னால் இருந்து
தீ வைத்து கொல்லாதீர்கள்.....
நான் விழும் போது
கை கொடுங்கள்,
நான் அழும் போது
தோள் கொடுங்கள்,
அகத்தில் இருந்து
அழகாய் பேசுங்கள்...
புறத்தே இருந்து
புண்படுத்தாதீர்கள்.....
நண்பா நீ எனக்கு இனிக்கும் நட்பாய் இரு......
கசக்கும் உப்பாய் இருக்காதே.....
-லி.முஹம்மது அலி