தேடலும் பகிர்தலும்

தேடலும் பகிர்தலும்


அறிவு வரிவடைவதற்கு தேடலும், பகிர்தலும் மிக அவசியம். முற்காலத்தில் குருமார், சிஷ்யர்களுக்கு வாய் மொழி மூலமே தமது அறிவின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துச்சொல்வார்கள். முழுவதையும் சொல்லிக் கொடுத்தால்,; குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாகி விடுவானோ என்ற பயம் குருவுக்கு. முக்கியமாக சிஷ்யன்; குருவின் நம்பிக்கையை பெற்றாகவேண்டும் அவரிடம் இருந்து அறிவைப் பகரிர்;ந்து கொள்ள. அதற்கு குருவானவர் சிஷ்யருக்கு பலத்த பரீட்சை வைப்பார். சிஷ்யனின் மேல் நம்பிக்கை வந்த பின்னரே சிறிது சிறிதாகத் தனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுப்பது வழக்கமாய் இருந்து வந்தது. கர்ணன் பரசுராமரிடம் கல்வி கற்கப் போய் ஏற்பட்ட விளைவை மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாய் மொழி மூலம் அறிவைப் பெற்றதால் எழுத்து வடிவில் அவை உருவகம் எடுத்தது மிகக் குறைவு. பின் அறிநது விடய்ஙகள வம்ச வழி பகிரப்பட்டது. அதுனால் ஆயுர் வேதம், இசை, மற்றும் கலைகள் அனேகமாக வம்சவழி வந்தவையே

தேடலின் போது பழைய புத்தகக் கடை அனுபவம்
அன்று ஒரு நாள் நான் லண்டன் சென்றிருந்த போது நூதனசாலைக்கு அருகே உள்ள புத்தகச் சாலை ஒன்று என் கவனத்தை ஈர்ந்தது. அங்கு மிகப் பழம் புத்தகங்கள் விற்பனைக்கு இருந்தன. என்ன புத்தகங்கள் விற்பனைக்கு இருக்கிறது என்று ஆராயும் போது, தமிழ்நாட்டில் வளரும் மரங்களை பற்றிய ஒரு 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஒருவர் ஆராச்சி செய்து எழுதிய ஒரு புத்தகம் என் கண்களுக்குப்; தென்பட்டது. கையில் எடுத்து மேலோட்டமாக வாசித்த பின் விலை என்ன என்று கேட்டேன். 100 பவுண் என்றார் கடைக்காரர். அடேயப்பா இந்தப் பழைய புத்தகத்துக்கு இவ்வளவு விலையா? என்றேன். ஆமாம். இது எங்கு தேடினாலும் கிடையாத போக்கிஷம். பல பவுண்கள் பெறுமதியான பழைய முத்திரைகளைப் போன்றது, என்றார் சிரித்தபடி அவர். அவர் கூறியது உண்மை என என் மனதுக்குப் பட்டது. அவர் சொன்னதைக் கேட்டதும் அந்த சமயம் எனக்கு யாழ்ப்பாணம் பழைய நூல் நிலையம் தான் என் நினைவுக்கு வந்தது. எவ்வளவு விலை மதிக்க முடியாத அறிவு போக்கிஷங்கள இருந்த கலைக்கூடமது. ஒரு சில இனத் துவேசவாதிகளால் சில மணித்தியாலங்களில் அப்போக்கிஷங்கள் சாம்பலாக்கப்பட்டது. அந்த புத்தகங்களைத் தேடினாலும் கிடையாது. அதே போன்று யாழ்ப்பாணக் கல்லூரி நூல் நிலையமும் ஆராச்சியாளர்களின் தேடலுக்கு தகுந்த இடம். வழமையில் பல்கலைக் கழகத்தில் உள்ள நூல்நிலையங்கள் தான் தேடலுக்கு உகர்ந்தது.

தேடல் பல விதம்
தமிழ் மக்களில் பலர்இ பணம் கொடுத்து புத்தகம் வாங்கி வாசிப்பது மிகக் குறைவு. ஓசியில் அல்லது சும்மா கிடைத்தால் வாசிப்பார்கள். அதுவும் தலையங்கம் அவர்களுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். இதுவே தமிழ் நாட்டில் தினத்தந்தியை பலர் விரும்பி வாசிப்பதுக்கு இதுவும் காரணம். “கத்தி முனையில் பகலில் கொள்ளை”, “பலருக்கு முன்னால் பெண் கற்பழிப்பு”, “ரயில் தடம் புரண்டு 800 பேர் சாவு”, இதுபோன்று மனதைக் கவரும் தலையங்கங்கள் உள்ள கட்டுரைகள் மக்களை வாசிக்கத் தூண்டுகிறது. அதனால் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள், தலையங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எழுத்தாளார் ஒருவர் ஒரு விடயத்தைப் பற்றி கட்டுரை எழுத வேண்டுமாகில் முதலில் இரண்டு நாட்களாவது அதைபற்றி பல கோணங்களில் சிந்தித்து குறிப்பெடுக்கவேண்டும். அதை விட முக்கியம் அவ்விஷயத்தைப் பற்றிய தேடல். எமக்குத் தெரியாத விஷயங்கள் பல. அதைப்பற்றி இணையத்தளத்திலோ, அல்லது நூலகங்களிலோ தேடல் வேண்டும். எமக்கு எல்லாம் தெரியும். தேடல் என்ன வேண்டியிருக்கு என்று எண்ணுவது ஒரு சிறு வட்டத்துக்குள் இருந்து எழுதுவது போலாகும். ஒரு தெரியாத விஷயத்தை மற்றவர்களோடு உரையாடி சந்தேகத்தை தீhப்;பது நல்லது. பல ஆராச்சிக் கட்டுரைகளின் முடிவில், எந்த எந்த நூல்களை ஆராச்சிக்குப் பயன் படுத்தப்பட்டன என்று குறிப்பிடுவது மரபாக இருந்து வருகிறது.

பகிர்வதில் சுயநலம்.
சிலர் தமக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுக்கத் தயங்குவார்கள். அது அவர்கள் சுபாவம். ஆனால் தேவைபட்டபோது மற்றவர்களிடம் அறிவைப் பெறப் பார்ப்பார்கள். சில சமயம் தமக்குத் தெரிந்ததிலும் பார்க்கஇ கேட்டவருக்கு அதிகம் தெரியாலாம் என்ற பயமாகவும் இருக்கலாம். அது ஒரு வகை சுயநலம். போட்டி என்று வந்தால் அந்தச் சுயநலம் கூடிவிடும். முன்பு ஒரு காலத்தில் யாழ்ப்பாணக் கல்லூரிகளில் பரீட்சை காலங்களில் பாடப் புத்தகங்கள்இ நோட்ஸ் எழுதிய கொப்பிகள் தீடிரெனக் களவுபோய்விடும். அதுவும் ஒருவகைத் தேடலைத் தோற்றுவிக்கும் செயல்தான்.

இணையத் தளத்தில் தேடல்
இணையத்தளத்தில் தேடல் முக்கிய பங்களிக்கிறது. கடல் போல் பல மொழிகளில் பல விஷயங்களை உள்ளடக்கிய இணையத்தளத்தில் மூழ்கி தேடிய முத்தான விஷயத்தை சில விநாடிகளுக்குள் டேடி கண்டுபிடிக்க பல தேடல் இயந்திரஙகள் துணைபோகின்றன. அந்த இயந்திரங்களில் மிக முக்கிய மாக குறிப்பிடப் படவேண்டியவை Google Chrome,Yahoo, Foxpro, Msn போன்றவை. பல இயந்திரங்களைப் பாவித்து தேடுவதறகு Copernic இயந்திரம் சிறப்பானது. இணையத் தளத்தில் தேடலை பல விதமாக செய்யலாம். உதாரணத்துக்கு “கேரளாவும் யாழ்ப்பாணமும் வரலாறும்” என்ற விஷயத்தை தேடினால் அதே வசனத்தை உள்ளடக்கிய விஷயங்களை தேடித்தரும். எழுத்துப் பிழை இருப்பினும் நீர் தேடியது இது தானா? என்று எழுத்துப் பழையில்லாத தேடும் வசனத்தை தரும். அதோடு கூட ஒரு கேள்வி கேட்டால் அதோடு தொடர்புள்ள விஷயங்களைத் தேடித் தரும். அல்லது கேரளா, யாழ்ப்பாணம, வரலாறு போன்ற வார்த்தைகளை உள்ளடக்கிய விஷயஙகளை தேடித் தரும். தேடித்தரும் விஷயங்கள் பிறமொழியில் இருப்பின் அதன் மொழி பெயர்ப்பும் சில சமயம் உண்டு. அது மட்டுமல்லாமல் அதோடு தொடர்புள்ள கட்டுரைகள் உள்ள இணைப்புகளையும் குறிப்பிடும். இணையத்தளத்தில் எலாலவறறையும் தேட முடியாது . உதாரணத்துக்கு ஒரு புத்தகத்தில் உள்ள எல்லா விடயங்களை முற்றாக வாசிக்க முடியாது. புத்தகத்தை பற்றிய விபரம் இருக்கும். பின்னர் கிரெடிட் கார்ட் மூலம் பணம் கொடுத்து இணையத்தளத்தினூடாக வாங்கலாம்.

தேடத் தேட சுவையானஇ நாம் கேட்டறியாத பல விஷயங்கள் வெளிவரும். அதற்கு எல்லை கிடையாது. அவ்விஷயங்களும் தேடலால் உருவாகியவையே. ஆராச்சியின் போது முன்பு ஒருவர் தேடித் சேகரித்து பின்னர் அவைற்றை அலசி ஆராய்ந்து தன் அறிவுக்குப் பட்டதுடன் கலந்து எழுதியதை வாசித்து எமது சிந்தனைகளுடனும்இ படித்து பெற்ற அறிவுடனும்;. கண்டு அனுபவித்த அனுபவங்களுடனும்இ கலந்துஇ சுவையாக எழுதுவது தான் சிறந்த கட்டுரை. சுவாமி சின்மாயனந்தா ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டார் “நமக்குத் தெரிந்தது மிகக் குறைந்த விகிதமே. கேட்டோ வாசித்தோ தேடியோ பெற்றது மிகப்பெரிய விகிதம். அதாவது எமக்குத் தெரிந்தது எள்ளளவு எமக்குத் தெரியவெண்டியது கடல் அளவு” என்றார்..

தேடலும் தேவையும்.
தேடலுக்குத் தேவையுண்டு. சுவையில்லாத . விருப்பமில்லாத விடயங்களை தேட பலர் தயங்குவார்கள். அதுவும் வேற்று மொழியில் இருந்தால் தேடத் தயங்குவார்கள். உதாரணத்துக்கு இலங்கை மக்களின் கலாச்சாரம் , கலைகள், வாழ்க்கை முறைகள், சாதிகளை பற்றி இலங்கையர் அல்லாத எம் டி இராகவன் என்பவர், நமக்குத் தெரியாத விஷயங்களை உள்ளடக்கிய பல புத்தகங்களை எழுதியுள்ளார். நான் “யாழ்பாணக் குடாநாடும் கேரளமும்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுது சிந்தித்தேன். அதைப்பற்றி சிந்திக்கும் போது பல விஷயங்கள் என் எணணத்தில் தோன்றின. உணவு, உடை, யாழ்ப்பாணத்தில் பேசும் தமிழ், வார்த்தைகளும், மலையாள வார்த்தைகளும் , அணியும் ஆபரணங்கள், ஊர் பெயர்கள், சடங்குகள். வரலாறு இப்படி எத்தனையையோ விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எனக்குத் தெரிந்தது எள்ளளவு. ஆகவே தேடலைத் தொடங்கினேன். ஆராச்சியில் ஈடுபட்டவர்களோடு பேசினேன். இணையத்தளத்தை தஞ்சம் அடைந்தேன். கிடைத்ததோ கொஞ்சம். ஒருவர் சொன்னார் “எம்.டி இராகவன் இதைப் பற்றிய ஒரு புத்தகம் பல வருடங்;களுக்கு முன் ஆங்கிலத்தில் எழுதியதாக எனக்கு ஞாபகம். அப்புத்தகம் இப்போது கிடைக்குமோ தெரியாது . தேடிப் பாரும்” என்று புத்தகத்தின் பெயரைத் தந்தார். தேடுகிறேன் தேடிக் கொண்டே இருக்கிறேன் மூர் மர்க்கட்டிலோ அல்லது கஸ்தூரியார் வீதியிலோஇ அல்லது மருதானையில் உள்ள பழைய புத்தகக் கடையிலோ புதைந்து கிடக்கிறதோ தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிட்சயம் குவியல் குவியலாக பழம் புத்தகங்களை விற்கும் கடைக்காரரிடம் போய் தேவையான புத்தகத்தின் பெயரைச் சொன்னால்இ உடனே பதில் வரும் புத்தகம் இருக்கிறதா இல்லையா என்று. அவ்வளவு ஞாபகச் சக்;தி அவருக்கு.

பழைய புத்தகங்களின் மதிப்பு
பழைய புத்தகங்கள் தங்கத்தை போன்று விலை மதிக்க முடியாதது என்றார் என் நண்பர் ஒருவர். ஏன் அப்படி சொல்கிறீர் எனக் கேட்டேன். “என் தகப்பனார் விட்டுச் சென்று பழைய புத்தகங்களையும்; நான் சேர்த்த ஆங்கில தமிழ் புத்தகங்களையும் ஈழத்துப் போர் காரணமாக புலம் பெயர்ந்துஇ கனடா சென்ற போது எனது வீட்டில் ஒரு அறைக்குள் போட்டு பூட்டிவைத்து விட்டு வெளியேறினேன். பதினைந்து வருடங்களுக்குப் பின் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் எனக்குத் அதரியாத ஒருவர் குடியிருந்தார். என்னை அறிமுகப்படுத்திவிட்டுஇ புத்தகங்கள்; வைத்த அறைப் பக்கம் போனேன். அறை திறந்திருந்தது. புத்தகங்களுக்கு எனன் நடந்தது? என்று கேட்டேன். சாக்குப் போக்கு சொல்லி கடத்திவிட்டார். இவ்வளவுக்கு அவர் பேச்சில் இருந்து அவருக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியாது என உணர்தேன். ஒரு வேலை புத்தகங்களை பழைய பேப்பர்காரனுக்க போட்டு காசாக்கினாரோ தெரியாது. “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்று என மனதுக்குள் நினைத்துக் கொண்டு மன வருத்தததுடன் திரும்பினேன்”இ என்றார் நண்பர் அதை சொல்லும் போது அவர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. இது போன்ற புத்தகப்பிரியர்களின் கதைகள் பல உண்டு. என் சகோதரர் கூட ஒரு காலத்தில் கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வன் இ சிவகாமியின் சபதம.ஈ பார்த்திபன் கனவு போன்ற கல்கியின் சரித்திரக் கதைகளைஇ கல்கி சஞ்சிகையில் இருந்து ஒவவொரு பக்கமாகஇ பக்குவமாக கிழித்தெடுத்துஇ சேர்த்து. புத்தகங்களாக்கினார். ஆனால் பாவம் 1983ம் ஆண்டு இனக் கலவரத்தில் அவர் சிரமப்பட்டு சேர்த்த போக்கிஷம் சில நிமிடங்களில் அவர் கண்முன் தீக்கிரையாயிற்று.

பகிர்தலின் இன்பம்
தேடினால் மட்டும் போதாது அதை பகர்ந்து கொள்வது போல் இன்பமில்லை. இணையத்தளத்தில் என் பார்வைக்கு ஒரு சுவர்ஷ்யமான கட்டுரை தென்பட்டால் அதை மின் அஞ்சல் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது போல சந்தோஷம் கிடையாது. அதன் பின் அதைப் பற்றிக் கருத்து பரிமாறுவதில் ஒரு தனிச்சுவையுண்டு. இதை அறிந்தோ என்னவோ சில கட்டுரைகளுக்கு கீழ் “இதை விரும்பினால் உன் நண்பருக்கு மின் அஞ்சல் செய்யவும் என அனேகமாக எழுதியிருப்பார்கள்”. பகில்தல்இ வாசிக்கவும் சிந்திக்கவும் தூண்டுகிறது. நான் வாசித்து நோக்கிய கோணம் வேறு அதே கட்டுரையை என் நண்பர் வாசித்து நோக்கிய கோணம் வேறாகயிருக்கும். பகிர்வதால் அறிவு விரிவடைகிறது. இப்போது தான் முகநூல்இ வட்ஸ் அப் இருக்கிறதே பகிர்வதற்கு.

தேடினால் விடை கிடைக்கும்.
ஒரு வாசகரின் நண்பர் குவியத்தைஇ இணைத்தளத்தில் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு “இப்ப புதுப் புது விளங்காத பெயர்கள் வைக்கினம். இது எதுக்கோ தெரியாது என்றாhராம்.” ஒரு வேளை அவருக்கு குமுதத்திற்கும் குவியத்திறகும் வித்தியாசம் தெரியாது போலும். இதுவும் ஒரு வித மலர் என நினைத்தாரோ தெரியாது. குமுதமும் குவியத்தான் செய்யும் என்பதை உணரவில்லை போலும். வாசகர் விளக்கம் கொடுத்தபின் “ஓ அப்படியா சங்கதி” என்றாராம். இதில் அவருக்குத் தேடலுக்கு ஆர்வம் இருக்கவில்லை என்பது உணரமுடிகிறது. ஆனால் அவர் தேடமலே வேறு ஒருவர் தேடி அறிந்ததை பகிர்ந்து கொண்டார். சிலர் தேடவுதற்கு எனக்கு நேரமில்லை என்பார். ஆனால் தனக்கு பொருத்தமான தொழில் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிபிடிப்தும் ஒரு வகைத் தேடலாகும்.

இரசனையும் தேடலும்.
சினிமா நடிகைகளின் கவர்ச்சியான அட்டைப் படங்கள் போட்டு அந்தர வாழக்கையை அம்பலப்படுத்தும் பத்திரிகைகள், சஞ்சிகைகளை தேடி வாங்குபவர் பலர். இது ஒரு வகைத்தேடல்.; உதாரணத்துக்கு லண்டனில் Financial Times, Guardian போன்ற தரம் கூடிய பேப்பர்களை வாசிப்பவர்களுக்கும், News of the world, Sun போன்ற கிலு கிலுப்பைத் தரும் பேப்பர்களை வாசிப்பவர்களுக்கும் உள்ள இரசனைகள் வேறு. இது கல்வித் தரத்திலும் ஓரளவுக்குத் தங்கியுள்ளது. எல்லா விரல்களும் ஒரேயளவாக இருப்பதில்லை.

தேடலுக்கு ஒரு ஆர்வம் வேண்டும். அதை பின்னர் அலசி ஆராயும் சிந்தனை வேண்டும். பின்னர் பகிர்ந்து கொள்ளும் தாராள மனப்பான்மை வேண்டும். அப்போது தான் அறிவு விரிவடையும். அதனை எமக்குள் பூட்டிவைத்தால் விரைவில் துருப்பிடித்து விடும். வாசிப்பதும், எழுதுவதும் ஒரு வகை தியான முறை என்பது என் கருத்து. கவலைகளை மறந்து விடலாம். இளம் சமுதாயத்தை பெற்றோர்கள் நூல்கள் வாசிப்பதற்கு ஊக்குவிப்பது மிகவும் அவசியம்.

*******

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (4-Sep-16, 4:46 am)
பார்வை : 169

மேலே