அவளின் கண்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
அவளின் கண்களைப் பற்றி
வெள்ளை நிறத்தின்மீது
கருப்பு சக்கரம் கொண்ட
காதலின் தேசியக்கொடி
அவளின் விழி
அவை இரண்டும்
கண்கள் அல்ல கண் எனும் கள்
அவை இரண்டும்
விழிகள் அல்ல காதல் ஊடுருவும் வழிகள்
வெள்ளைக்கண்களில்
வெள்ளரிக்காய் வைக்கின்றாள்
அந்த
வெள்ளைக்காரியின் குளிர்ச்சியை
வெள்ளரிக்காய் எடுத்துக்கொள்வது தெரியாமல்
அவள் கண்களுக்கு மருந்திடவில்லை
மாறாய் மருந்திற்கு விருந்திடுகிறாள்
அவள் சிந்திய கண்ணீர்த்துளிகள்தான்
தண்ணீர் துளிகளாய்
பெருக்கெடுக்கிறது புவிக்குள்
அவளின் பார்வைத்துளிகள்தான்
கோர்வைத்துளிகள் ஆனது
என் கவிக்குள்
அவளின் கண்களோ
காட்சிகளைக் காணுகின்றது
மனை மாட்சிகளைப் பூணுகின்றது
அற்புதமாய் நானுகின்றது
அது எனக்கோ
பொற்பதமாய்த் தோணுகின்றது
கண் இமைக்கும்போதெல்லாம்
கண் மையினைத் தொடுகின்றாய்
பெண்மையினை
ஆண்மைக்குள் நடுகின்றாய்
அவளின் கண்கள்
பிடித்தவனுக்கோ கருப்பு காந்தம்
இடிப்பவனுக்கோ அது நெருப்பு காந்தம்
காந்த வயல் கொண்ட
அவள் கண்கள்தான்
சாந்த வயலையும் உமிழ்கின்றது
அவளின் கண்களை
எவன் தானமாய்ப்பெறுகின்றானோ
அவனே இந்த ஞாலத்தில்
அதிக ஞானத்தைப் பெறுகின்றான்
ஓரக்கண்ணால்
அரக்கனையே சாய்க்கும்
திறன் கொண்டவள்
கடைக்கண்ணால்
படையனைத்தும் மாய்க்கும்
அரண் கொண்டவள்
அவளின் பார்வை படும்நேரம்
இலைகூடத் தூக்க முடியாமல்
தலை தூக்கமுடியாதவன்கூட
மலை தூக்க முயல்கிறான்
கடல் அலை தாக்க முயல்கிறான்
இமையிலோ
மேலும் மை வைத்தாய்
கீழே மேலும் மை வைத்தாய்
இடையிலோ என் மெய் வைத்தாய் ?
உன் விழிகள்
இதழ் இன்றி
இமை ஊன்றிப் பேசுகின்றன
பண் மொழிகள்
அவளின் கண்களை
கம்பன் மீன் என்றான்
கபிலன் தேன் என்றான்
வாலி மான் என்றான்
நண்பன் அவற்றைப் பார்க்காதே
காலி நான் என்றான்