அவள் எங்கே என்று

அவளை கடந்து சென்ற காற்றிடம் கேட்டேன் அவள் எங்கே என்று
அவளை தீண்டி விட்ட சென்ற தென்றலிடம் கேட்டேன்
அவள் எங்கே என்று
அவளை நனைத்து சென்ற மழையிடம் கேட்டேன் அவள் எங்கே என்று
அவள் பாதம் பட்ட மணலிடம் கேட்டேன்
அவள் எங்கே என்று
அவள் மீட்டிய வீனையிடம் கேட்டேன்
அவள் எங்கே என்று
அவள் கையில் இருந்த கடிகாரத்திடம் கேட்டேன் அவள் எங்கே என்று
அவள் கட்டிய சேலையிடம் கேட்டேன்
அவள் எங்கே என்று
அவள் போட்டு சென்ற கோலத்திடம் கேட்டேன் அவள் எங்கே என்று
அவள் இளைபாரிய மரத்திடம் கேட்டேன்
அவள் எங்கே என்று
அவள் கை விரலில் இருந்து விழுந்த மோதிரத்திடம் கேட்டேன்
அவள் எங்கே என்று
அவள் தலையில் இருந்த விழுந்த மல்லிகையிடம் கேட்டேன்
அவள் எங்கே என்று
அவள் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டிருக்கும் என் மனதிடம் கேட்டேன்
அவள் எங்கே என்று
என்னை தனியே தவிக்க விட்டு சென்ற அவளை எங்கே சென்று தேடுவேன்
அவளை யாராவது பார்த்தால்
என்னிடம் திருப்பி அனுப்புங்கள்
அவளுக்காக இங்கே நான் காத்து கொண்டிருக்கிறேன்
அவள் நினைவுகளை சுவாசித்து கொண்டு.....

எழுதியவர் : கா. அம்பிகா (4-Sep-16, 8:07 pm)
Tanglish : aval engae enru
பார்வை : 600

மேலே