மகளதிகாரம் 2 சொர்க்கத்தின் மலர்கள் கூடி
பிஞ்சுக் கால்களின் நாட்டிய பாதங்கள்
நெஞ்சின் தரையில் பதிக்கும் ஓவியங்கள்
கொஞ்சிக் கொஞ்சியவள் பேசும் வார்த்தைகள்
குறிஞ்சி நினனைவுகளில் பாயும் ஓடைகள்
----நான் மலைஜாதி ..மகள் ஜீவநதி !
துர்கா பரமேஸ்வரி கோயில் யானை போல்
'பூம் ' என்று பிளறி கைத்தும்பிக்கையால் ஆசீர்வதிப்பாள்;
தாத்தா பாட்டியை அவள் பெயரிட்டுத்தான் அழைப்பாள்
அவர்கள் பேரன் பேத்தி ஆகிறார்கள்
----அது, அடிநெஞ்சின் உணர்வூஞ்சலில் உயிர் பாடும் உறவு
மகளைப் பிரிந்திருந்த பாலை நாட்களில் அவள் முகம்
நிலா அலைவரிசையில் தெரிவதாக சொல்லிவைத்த பொய்யைப்
பல வசந்தங்கள் நம்பிக்கொண்டிருந்தது அப்பிஞ்சு.
----அது, ஜென்மங்களில் அவள் தொடரும் நீங்காத நினைவு
'ரேவதி' மகள் பிறந்த நட்சத்திரம்
ரம்யா எங்கள் வாழ்க்கையின் சித்திரம்
சொர்க்கத்தின் மலர்கள் கூடி
எழுதி அனுப்பிய பத்திரம்
மிகையில்லை இதில் பிழையில்லை
----தாயிற் சிறந்த கோயில் -அவள்
----தந்தை சொல்மிக்க மந்திரம் !
***