​ஆசிரியர் தின வாழ்த்து

​அகர​முதல எழுத்து முதல்
சகல​மும் அறிந்திட நமக்கு
ஆரம்ப கல்விக்கு உரமிட்டு
அனைத்தும் அறிய உதவிட்டு
அன்று​ முதல் இன்றுவரை
​அயரா பாடுபடும் நெஞ்சம்
ஆசிரிய​ர் இனம் ஒன்ற !

அறிவொளி எனும் சுடரொளியால்
அறியாமை எனும் இருளகற்றி ​
ஒழுக்க​ம் எனும் பண்பாட்டை
அன்புடனே​ நன்கு அறிவுறுத்தி ​
வாழ்​க்கை எனும் பாதையிலே ​
பீடுநடை போட பயிற்றுவிக்கும்
ஆசானே ஆசிரிய பெருமக்கள் !

சாதி​இ​னம்​ பார்க்காத போதிமரங்கள்
​சரிசமமாய் நடத்திடும் ஆசிரியர்கள் !
அள்ளியள்ளி​த் தந்திடுவர் கல்விதனை
அறிவுப்பசி போக்கிடுவர் ஆசரியர்கள் !

​தொண்டாற்றும் ஆசிரியர்கள் என்றும்
குறையின்றி வையத்தில் வாழ்ந்திட
நிறைவோடு வாழ்க்கை அமைந்திட
மனதார வாழ்த்துகிறேன் நான் !

மறக்க இயலா மாணிக்கமவர்கள்
மண்ணில் என்றும் மகிழ்ச்சியுடன்
வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன் !

ஆசரியர் தின நல்வாழ்த்துக்கள் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Sep-16, 9:55 pm)
பார்வை : 157

மேலே