தந்தையும் மகனும்

தந்தையே!. - இந்தா
என் கையே !.
விந்தையாய்
வாழ்கின்ற உன்னைக்
கண்டு - நான்
வியந்துப்
போகின்றேன்!. - என்
எதிர்காலத்தைக்
கண்டு!. - வீட்டில்
கண்ணீரோடு
கலங்கி வாழ்கின்றாள் - உன்
கைப் பற்றியவள் - நீயோ
ராகிங் நடையில்
தடைத் தாண்டவும்
தள்ளாடி நடக்கின்றாய் - ரோட்டில்
அன்னை மீது
இறக்கம் கொள்வதா?
அப்பனே! உன்மீது
இறக்கம் கொள்வதா?
என்மீது
எவர் இறக்கம் கொள்வீரோ?
நிகழ்காலத்தில்
நிர்க்கதியாய்
நிற்கின்ற - என்
எதிர்காலம் துளிர
இந்தா
என் கை என்று
எவர் சொல்வீரோ?
தன் கையே
தனக்குதவி என்று
எனக்குதவி புரிய
மறந்துதான் - குடி
மகனாய் நடைப் போட்டாயோ?
என் கை
எனக்கு உதவிப் புரிய
எடுத்துரைத்தப் பெற்றவனே!
உன் கை
உனக்கு உதவிப் புரியாமல்
உதறலில் உள்ளது கொற்றவனே!
உறவு என்ற நூலில்
உதிரும் பூவாய் - ஊரறிய
உலகறிய
செய்திட்ட செய்தித்தாளில்
என்னையும் உன்னையும்
இணைத்து வெளியிட்டது !.
இதில்
உதிருவது நீயா? நானா?
உலகறியும். ஊரறியும்.
உன்னால் உதிருது என்
உள்ளக்கனவுகள்!



எழுதியவர் : kaanchi. vaasavaththathan (a)s.sanku subra manian (28-Jun-11, 6:50 pm)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 432

மேலே