காதல் விடுகை
இதய வீணைகள்
இசைக்கின்றன உன்
இமை அசைவினிலே
இயக்கின்றாயா நீ என்னை
இம்சிக்கின்றாயா புரியவில்லை
எனக்கு...........
பார்த்ததுமே உன் மேல் ஆசை
பத்திக்கொண்டதுவே நீ காந்தமா
நான் உன்னைசுற்றிய இரும்பு துகளா
சுற்றுகின்றேன் உன் பார்வையிலிருந்து
பிரியமுடியாமல்
கண்ணால் பேசிய காதல்
காவியங்கள் கரை சேருவதில்லை
காதலை உயிர்ப்புடன் உரைக்கும் வரை
உயிர்பித்தால் நீ மறுப்பாயா முறைப்பாயா
சொல்லு அன்பே