உன்விழிப் பார்வையிலே

ஹாய் டாடி....! கெட்டவங்க யாரு,?
என்ற அப்பாவியாகக் கேட்ட சுரேஷின்
தலையை கோதியபடி, அப்படியெல்லாம்
ஒண்ணும் இல்லைப்பா.?
நல்லவங்களுக்கு அப்படியெல்லாம்
யாரும் கிடையாது. பிடிச்சவங்க
பிடிக்காதவங்களை நல்லவங்க
கெட்டவங்க என்று எடுத்து
கொள்ளலாம் என்று விளக்கம் கொடுக்க,
கார்த்திக்கை வியப்பாக பார்த்தான்
சுரேஷ்.
கார்த்திக் தன் கண்கள் விரிய, "உனக்கு
டாடியை பிடிக்கும் இல்லையா.,!"
என்று கேட்க, அதற்கு பதிலாய்
புன்னகையை உதிர்த்து விட்டு,
அவனை அணைத்தபடி தூங்கத்
தொடங்கினான் சுரேஷ்.
மென்மையான காற்றின் அமைதியில்
அமிழ்ந்து கிடந்த இரவை உலுக்கி
எழுப்பியது போல் அந்த சத்தம் வீட்டை
அதிர வைத்தது. என்னவாக இருக்கும்
என்று கார்த்திக் யூகிப்பதற்குள் யாரோ
நான்கு பேர் ஓங்கி வாசற்கதவை
அறைவது போல் தட்டினர். .....!
எண்பதின் இதயத்துடிப்பு நூறைத் தொட்டவனான் பதறிச்சென்று கதவைத் திறந்தவனுக்கு அங்கேயும் அதிர்ச்சி.. இன்னொருவனின் நெற்றியில் துப்பாக்கியை வைத்தபடி பேச தொடங்கினான் ஒருவன் 'சார் இவனெரு குற்றவாளி கைது செய்து வரும்போது வண்டி ரிப்பேராகி விட்டது காண்ஸ்டபிள் அதை சரிசெய்து வரும்வரை இவரை உங்கள் வீட்டில் வைத்திருக்க அனுமதி வேண்டும்'என்று.. ஒரு கெட்டவனைப்பிடிக்க நல்லவனுக்கு உதவலாமே என்ற எண்ணத்தில் ஒரு அறையை ஒதுக்கிதர கெட்டவனை நாற்காலியில் அமர்த்தி அருகே துப்பாக்கியுடன் அமர்ந்தவனை பார்த்துவிட்டு கண் அயர்ந்த நேரம் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்த சுரேஷை தள்ளிவிட்டு உள்ளே புகுந்த போலீஸ் அந்த இருவரையும் கைது செய்தது.
வியப்பில் விழித்த சுரேஷிடம் வந்த போலிஸ் ஒருவர் 'இருவருமே திருடர்கள் உங்களிடம் எதைத் திருடினார்கள்' என்றதும் இல்லையென தலையசைத்தபடி நல்லவர் கெட்டவர் இரண்டையும் நம் பார்வையும் தீர்மானிக்கும் என்று நினைத்தபடியே தன் மகனைத் தழுவிக் கொண்டான் சுரேஷ்
-மூர்த்தி

எழுதியவர் : monrthi (9-Sep-16, 1:53 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 278

மேலே