காற்றுள்ள போதே
காற்றுள்ள போதே
கடல் அலைகள் ஓய்வதில்லை
காலத்தின் வேகமும் குறைவதில்லை
வாழ்க்கை நியதிகள் மாறுவதில்லை
காலங்கள் உனக்காய் காத்திருப்பதில்லை
ஆதலால் காற்றுள்ள போதே நீயும்
தூற்றிக்கொள்....
உனக்கான கதவுகள் ஒருமுறைதான் திறக்கப்படும்
வாழ்வில் வசந்தங்கள் ஒரு முறைதான் தேடி வரும்
காலங்கள் பின்னோக்கி நகர்வதில்லை
வரும் வாய்ப்புகள் உனக்காய் தேங்கி நிற்பதில்லை
ஆதலால் காற்றுள்ள போதே நீயும் தூற்றிக்கொள்....
இளமையில் சோர்வின்றியே நீயும் உழைத்துவிடு
முதுமையில் ஓய்வெடுத்தே நீயும் உறங்கிவிடு
இழந்த வாழ்க்கை மீண்டும் கிடைப்பதில்லை
ஆதலால் காற்றுள்ள போதே நீயும் தூற்றிக்கொள்...
உன் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும்
அனுபவித்தே இன்பமாய் நீயும் வாழ்ந்துவிடு
உன்னை தேடிவரும் வாய்ப்புக்களை வரங்களாய்
நீயும் மாற்றியே
உன் வாழ்க்கையை முழுமையாய் வாழ்ந்துவிடு...