புதுமைப் பெண்
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணாய்ப் பிறத்தல் பெருமையே
கண்ணாய் வளர்த்தலும் கடமையே
செல்வமுடன் இருந்தால் செழுமையே
ஏழ்மையுடன் வாழ்ந்தால் கவலையே
சிறப்பான வாழ்க்கையும் மகிழ்ச்சியே
சிந்தையும் உணர்ந்திடும் நெகிழ்ச்சியே !
தாயில்லா குடும்பமும் தவித்திடும்
தந்தையின் உள்ளமோ தளர்ந்திடும்
தெரிந்திடும் தொழிலால் நடந்திடும்
புரிந்திடும் நெஞ்சமும் வருந்திடும்
உழைத்திடும் நாளும் பிள்ளைக்காக
வளர்ந்திடும் மகளின் வாழ்விற்காக !
நிலையறிந்த காரணத்தால் மகளவள்
சூழலறிந்த நிலையால் உதவுகிறாள்
செய்திடும் தொழிலுக்குத் துணையாக
அணிந்திட்ட சீருடையைக் களையாது
கனிந்திடும் காலமும் என்றெண்ணி
விடிந்திடும் நாளை எதிர்நோக்கியே !
புதுமைகள் நிகழ்ந்திடும் புதுயுகத்தில்
பதுமைகள் பணிபுரியும் இக்காலத்தில்
வெறுமையை சுட்டெரித்த சுடரிவள்
பொறுமையுடன் உதவுகிறார் தந்தைக்கு
கடமையென செய்கிறார் சிறுமியிவள்
மடமைகளை கொளுத்திய மங்கையாய் !
பாரதி விரும்பிய புதுமைப்பெண்
பாரினில் சிறந்து விளங்கட்டும் !
பழனி குமார்