முடி வளரவே இல்லையாம்
ஒருவர்:- டாக்டர்! உங்கக்கிட்ட இருந்து வாங்கின, அந்த விலை உயர்ந்த தைலத்தை தொடர்ந்து மூணு மாசமா என் மனைவி தலைல தேய்ச்சும் முடி வளரவே இல்லையாம்!
டாக்டர்:- அப்படியா! சரி உங்க மனைவியை கூப்பிடுங்க!
ஒருவர்:- சாரி டாக்டர்! புறப்படற நேரமா பார்த்து வீட்ல விருந்தினர் வந்திட்டதனால, அவளால வர முடியாம போச்சு!
டாக்டர்:- அப்புறம் நான் எப்படி செக்கப் பண்ணி பார்க்கறதாம்..?
ஒருவர்:- அதனால என்ன டாக்டர்! தினமும் அவள் தைலம் பூசி, உயிரா பார்த்துக்கற அந்த "சவுரி முடி"யை எங்கிட்ட கொடுத்து அனுப்பி இருக்கா! செக்கப் பண்ணி பார்த்துக்கிட்டு சொல்லுங்க...!
டாக்டர்:-?