காதலில் காமம்
அன்றும் கடற்கரையில்
காதலர்கள் உலாவி வந்தனர்
பண்பாய் பேசி அன்பைப்
பரிமாறி கொண்ட பின்னர்
பிரிந்து சென்று விடுவார்
இன்றும் கடற்கரையில்
காதலர்கள் கூடுகின்றனர்
அவர்கள் காம விளையாட்டில்
நம் பண்பும் கலாசாரமும்
காணாமல் போய்விடுதே
இது இன்றைய இளைய சமுதாயம்
அங்கீகரிக்கும் இறக்குமதி !
காமம் காதலின் முதல் அத்தியாயம்
அது இலைமறைவாய் காய் மறைவாய்
இருத்தலே நம் முன்னோர் வகுத்த வழி
பண்பின் வழியது காதல் என்று வாழ்ந்தால்
காதல் என்றுமே கசப்பதில்லை
காதலரும் என்றும் பிரிவதில்லை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
