உமி-ன்னு பேரு வைக்கலாமே - உரையாடல் குறுங்கதை

ஏன்டியம்மா பட்டணத்துப் பொண்ணு உம் பேரு என்னடி?
@@@@@
எம் பேரு தேன்மொழி பாட்டிம்மா.
########
உம் பக்கத்துல நடந்து வர்றானே அந்தக் குட்டிப் பையன் யாரு?
#####
எம் பையந்தாம் பாட்டிம்மா.
#######
அவம் பேரு என்னடி?
########
அவம் பேரு அமி பாட்டிம்மா.
@@@@@@@@@
ஏன்டி தேன்மொழி உன்னோட ஆத்தாளும் அப்பனும் உனக்கு தேன்மொழின்னு அழகான தமிழ்ப்பேர வச்சிருக்காங்க. நீயும் உம் புருசனும் உங்க பையனுக்கு அமி-ன்னு பேரு வச்சிருக்கறீங்களா. அதுக்குப் பதிலா உமி-ன்னு பேரு வச்சிருக்கலாமே. அந்த வார்த்தைககாவது தமிழ்ல அர்த்தம் இருக்குது.
@@@@@@
பாட்டிம்மா என்னோட கணவர் வெளிநாட்டில வேல பாக்கறாரு. அவுருதான் இந்தப் பேர வச்சாரு. அமி-ன்னா ' அதிகமாக நேசிக்கப்படுகிற/அன்பு காட்டப்படுகிற' ன்னு அர்த்தமாம். இந்தப் பேரு பிரஞ்சு, ஆங்கிலம், ஹீப்ரு, ஜெர்மனி, ஜப்பான மொழி, சமஸ்கிருதம் இந்தி போன்ற மொழிங்களிலயும் இருக்குதாம். இந்தப் பேர பசங்களுக்கும் வச்சுக்கலாம்;பொண்ணுங்களுக்கும் வச்சுக்கலாம்.
@@@@#@@
அதெல்லாம் சரிடி தேன்மொழி. என்ன இருந்தாலும் நம்ம தமிழ்ப் பேரு மாதிரி இருக்குமா?
@@@@@#@@
நீங்க சொல்லறது நியாந்தான் பாட்டிம்மா. தாய்ப் பால் இருக்கறபோது கொழந்தைக்கு புட்டிப்பால் குடுக்கறமாதிரிதான் மத்த மொழிப் பேருங்கள வைக்கறதும்.
@#@###@@@@@################ மொழிப் பற்றை வளர்க்கவே இந்தத் தகவல்
@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : மலர் (25-Sep-16, 12:14 am)
பார்வை : 138

மேலே