ஈகையின் உயர்வு
' செத்தும் கொடுத்தான் சீதக்காதி
முல்லைக்கு தேர்தந்தான் பாரி
அவ்வைக்கு அறிய நெல்லிக்கனி
அளித்தான் அதியமான் 'இன்று
இத்தகைய கொடை வள்ளல்கள்
காண கிடைக்கவில்லை ஏன்?
கொடுப்பதற்கென்ற இதயம்
இன்று மனிதரிடம் இல்லாமல்
போனதாலே;தாம் வாழ்ந்தால்
மட்டும் போதும் என்ற குறிகிய
மனப்பான்மை இந்த மனித
குலத்தையே தனக்கு இரையாக்கிக் கொள்ளும்
ஆதலால் குணத்தால் உயர்வோம்
சித்தம் தெளிந்து மற்றவரை வாழவைத்து
நாமும் வாழ்வாங்கு வாழ்வோம்