முக்குத்தா, முக்குத்தா

அம்மா உங்க பேத்தி பேரு முக்தா. இந்தப் பேர நானும் உங்க மருமகள் அருளரசியும் ஆசைப்பட்டு உங்கச் செல்லப் பேத்திக்கு வச்சோம். நீங்க இந்த அழகான பேர சரியாச் சொல்லாம முக்குத்தா, முக்குத்தா-ன்னு கூப்படறீங்களே பாக்கறவங்க என்னம்மா நெனைப்பாங்க.

#@@@@@@
ஏண்டப்பா மருதமுத்து, நீ பெரிய படிப்பு படிச்சவன். மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கற. என்னமோ நம்ம தாய் மொழில அழகான பேருங்களே இல்லாத மாதிரி படிக்காதவங்கதான் சினிமா ரசனையில இந்திப் பேர பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. பெரிய படிப்பு படிச்ச நீயே சினிமா ரசிகன் மாதிரி நடந்துட்டா எப்பிடிடா மருது உன்னப் பாராட்டமுடியும்?
@@@@
அம்மா, உலகம் போற போக்கிலதான் நாம போயாகணும். தொண்ணூத்தொன்பது சதவீதம் தமிழர்கள் இந்திப் பேருங்கள வைக்கறபோது நா என்ன செய்யறது?
#@@@@@
சரிடா மருது. நீ கூட்டத்தில கோயிந்தாப் போடற ஆசாமியா இருப்பன்னு எனக்கு தெரியாம போச்சே. சரி, சரி. அந்த முக்குத்தாவுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுடா மருது.
@@@@@
'முக்தா' -ன்னா முத்து-ன்னு அர்த்தம். விடுவிக்கப்பட்ட-ங்கற அர்த்தமும் இருக்குதம்மா.
@@#@
ஏண்டா மருது, எம் பேத்திக்கு முக்குத்தா-ன்னு பேரு வச்சதுக்குப் பதிலா முத்து-ன்னே பேரு வச்சிருக்கலாமே. அந்தப் பேர பசங்களுக்கும் வைக்கலாம் பொண்ணுங்களுக்கும் வைக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@சிரிக்க அல்ல;சிந்திக்க; தாய்மொழிப் பற்றை வளர்க்க.
@@@@
தமிழகத்தில் சில லட்சம் இந்திக்காரர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர்கூட தன் பிள்ளைக்கு தமிழ்ப் பெயரைச் சூட்டியிருக்கமாட்டார். மொழிப் பற்றையும் மொழி சார்ந்த இனப் பற்றையும் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

எழுதியவர் : மலர் (2-Oct-16, 4:51 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 205

மேலே