மடியிலே மடியவா

செம்புலப்பெயர்நீராய் அன்பிலே கலந்தவனே,
என் காயத்தின் மருந்தாய் நீதானே இருந்தாய்.
காயாதமுத்தத்தை நீதானே தந்தாய்.
பாலுக்குள் நீராய் உனக்குள் நான் கலந்திருக்க,
பாரிலே நான் வாழும்வரை முடியாது உனைமறக்க,
பாலையில் நீர் தேடும் பாவையாய் நான் இருந்தபோது என்
தாகத்தை தனித்திடும் தடாகமாய் நீ வந்தாய்.
தனிமை தீவில் ,நான் தவித்தநேரத்தில்
தோலிலே சாய்ந்து எந்தன் தோழனாய் மாறினாய்.
அனிச்சமலர் என்னை நீ அழவைத்து பார்த்ததில்லை.
இனிமேல் நீதானே நான் கொஞ்சும் சிறுபிள்ளை..

எழுதியவர் : கு.தமயந்தி (2-Oct-16, 9:05 pm)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 109

மேலே