அவள்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா :

கார்குழல் கண்டதும் வான்மழை வந்ததே
வேர்விட்டு முல்லைப்பூ பூமியில் பூத்ததே
பார்வைகள் வீசுகின்ற மோகன அம்புகளால்
தார்ச்சாலை ஆனதேசோ லை......


ஒரு விகற்ப நேரிசை வெண்பா :

கார்குழல் கண்டதும் வான்மழை வந்ததே
வேர்விட்டு முல்லைப்பூ பூத்ததே - கூர்விழி
பார்வைகள் வீசுகின்ற மோகன அம்புகளால்
தார்ச்சாலை ஆனதேசோ லை......

எழுதியவர் : இதயம் விஜய் (5-Oct-16, 7:51 pm)
Tanglish : aval
பார்வை : 1049

மேலே