நோய் தின்னும் வாழ்க்கை
மரங்கொத்தி போலத்தான்;
ஆனாலும் மௌனமாய்
இம்சை.
கனவுகளும், ஆசைகளும்
நேற்றிலிருந்தும்
நீண்ட நாட்களாகவும்
மிச்சமிருக்கின்றன.
தன் வளர்ச்சியும், சூழ்ச்சியும்
தடைப்பட்டு...
மரணம் நெருங்கினால்
நல்லதா?
தள்ளிபோனால் நல்லதா?
ஓரோர் நேரமும்
வேறோர் நினைப்பு.
வாழ்வை மட்டுமல்ல
மரணத்தையும்
தின்று கொண்டிருக்கிறது
நோய்.